அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Wednesday, November 28, 2012

சமையல் குறிப்புகள்




முட்டைக் கொத்சு

தேவையான பொருட்கள்
முட்டை - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3 சிட்டிகை
எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நைஸாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானவுடன் எண்ணெய் ஊற்றி, நறுக்கியவைகளை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு முட்டையை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி அதில் ஊற்றி முக்கால் வேக்காடாக இருக்கும்போதே இறக்கிவிடவும்.
இது ஆப்பத்திற்கு சுவையான ஒரு தொட்டுக்கறி!

Monday, November 26, 2012

இறை வேதம்,

குர்ஆனில் ‘ஹுத்ஹுத்’ (الْهُدْهُد) பறவை

  ‘ஹுத்ஹுத்’ (الْهُدْهُد) மரங் கொத்திப்பறவை  

மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள் உடையவை. இறைமறை கூறுகிறது:-

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். (27:20)

لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُّبِينٍ
‘நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்.அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்’ என்றும் கூறினார். (27:21)

கவிதைகள்,




தாயும் சேயும் கருவறையில்...  
அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்
என் கண்மணியே உன்னை
 
இவை தான் உலகமென்று
புறம் காண மறுக்குதம்மா உள்ளம்
அகத்தே உன் அரவணைப்பில்
நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே
  
எனை சிறைமீட்கும் வேள்விதனில்
வேதனை பல அனுபவிப்பாயே
என் தாயே உன் வேதனையின்
தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்
 
சோதனையும் வேதனையும்
உன் முகம் காண காற்றாக
பறந்திடுமே கண்மணியே
நீ ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - ஏக்கம்
எங்கும் நிறைந்திருக்க
தூக்கமில்லா உன் நினைப்பில்
காத்திருப்பேன் உனக்காக
 
பெண்மையிலே வளர்ந்தேனே
உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு
ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா
மாற்றமிலா உண்மையிது
 
எனைக்காக்கும் இன்னுயிரே
உனைக்காப்பேன் என்றுமிங்கு
உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் முத்தமிடுகிறேன்
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு..............



கவிதைகள்



      ன்பு     
 
மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.
 
அன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.
 
உண்மை அன்பு எத்தனை திண்மைத்
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.

உண்மை அன்பு ஒருவனுக்கு யானை
பலம் தரும் சக்தியுடைத்து.
 
அன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.
 
மழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத ஜீவசக்தி அன்பு.
 
எத்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.
 
கரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).
 
அன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.
 
அன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.

ஓர் குருடியின் கடிதம்!

  
அபூ மஸ்லமா  

அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது.

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் சித்தி எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.

Wednesday, November 21, 2012

முஸ்லிம் பெண்கள் எங்கே? - Abdul Basith Al Bukhari


மவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி

ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்

ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.
 
ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்


   அல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்   

2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."

3:31. (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

Tuesday, November 20, 2012

தூக்கம் மறந்த கண்கள்!


   தூக்கம் மறந்த கண்கள்!   

இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் ஒன்றான தூக்கத்தினை நம்மில் பலர் பேர் அலட்சியப்படுத்துகிறோம். இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் நமக்கு தூக்குவதற்கு நேரம் கிடைப்பது இல்லை. காலம் தவறி தூங்கி வருகிறோம்.

தூக்கம் சரியாக இல்லையென்றால் நமக்கு நோய்கள் தான் அதிகம் வரும் என்பது நமக்கு தெரிந்தும் தூக்கத்தினை குறிப்பிட்ட நேரத்துக்குள் தூக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும்பி விட வேண்டும் என்பதினை நாம் பேணி காப்பது இல்லை. ஆகையால் பலர் இவ்வுலகத்தில் மனக்கஷ்டம், மனச்சுமை, மனப்பாரம் போன்ற காரண காரியங்களால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பாடுகிறார்கள் என்பது நமக்கு தெரிந்தது தான்.

கனிவாக நடந்துக் கொள்வோம்!

 
    கனிவாக நடந்துக் கொள்வோம்!    

    மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ    

ஒரு முறை "ஸூப்யானுஸ் ஸவ்ரி" ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தோழர்களை நோக்கி: "கனிவு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்: "அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்." அப்போது இமாமவர்கள்: "அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்" என பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள்.

"கடினமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் கடினமாக நடந்து கொள்வதும், மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் மென்மையாக நடந்து கொள்வதும், வாளேந்திப் போராட வேண்டிய இடத்தில் வாளேந்திப் போராடுவதும், சாட்டையைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சாட்டையைப் பயன்படுத்துவதுமே கனிவாகும்" என விளக்கினார்கள்.

Tuesday, November 13, 2012

 
 நபி மருத்துவம் - திராட்சை !

திருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள். 

        சேதாரம் எனும் பெயரில் பகிரங்கக்கொள்ளை!       

தங்கமே தங்கம்... தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக்கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கானதங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! 

இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கிஅவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்! 

நண்பரின் ஆதங்கம் இதுதான்....

சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே.